உலக அளவி ல் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1900 டாலர்கள் என்ற அளவில் இருந்தது .
தற்போது அது 1600 டாலர்களுக்கும் கீழே இறங்கியுள்ளது..
கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தங்கத்தின் விலை மேல் நோக்கியே சென்று கொண்டிருந்தது.2013 இல் தான் கொஞ்சம் விலை குறைய ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இதுவரை தங்கத்தின் விலை சுமார் 6 சதம் உலக சந்தையில் குறைந்து விட்டது.
உலகின் அதிக அளவு தங்கத்தை உபயோகிக்கும் நாடான இந்தியாவில் இந்த அவிலை குறைவு அவ்வளவாக பயன் தர வில்லை.
காரணம் இந்தியாவில் உள்ளூர் வரிகள்,சேவை வரிகள் என்று வரிச்சுமை அதிகமாக உள்ளதுதான். மேலும் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருவதாலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி மூலம் தங்கம் வாங்கி வைக்கும் அளவு மக்களிடையே பணப்புழக்கம் இ ல்லை. இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே உள்ளது.

தங்கத்தின் விலை இன்னமும் குறைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
ஆனால் உலக அரசியலில் போர் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் தங்கத்தின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.
க டந்த பத்து மாதங்களில் 323 டன் தங்கத்தை சீனா உற்பத்தி செய்துள்ளது. சீனாதொடர்ந்து, ஆறு ஆண்டுகளாக தங்கம் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகித்து வருகிறது.2012ல் முதல் பத்து மாதங்களில் மட்டும் 323 டன் தங்கம் உற்பத்தி செய்துள்ளது.
இது சீனா கடந்த ஆண்டில் உற்பத்தி செய்ததை விட 11 சதவீதம் அதிகம்.ஆனால் உலகில் அதிகஅளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தான்தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சீனா,இரண்டாவது இடத்தில் தான் உள்ளது.

இந்தியாவில் கச்சா எண்ணைக்கு அடுத்தபடியாக தங்க இறக்குமதிக்கே அதிக அளவு அன்னியச் செலாவணி செலவிடப்படுகிறது. இந்தியாவில் திருமணத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.மத வேண்டுதல்களிலும் தங்க பொருட்கள் பங்கு வகிக்கிறது.ஆனால் பெருமளவில் தங்கம் ஒரு சேமிப்பு பொருளாகவும் உள்ளது.ஆனால் பூட்டி வைக்கப்படும் தங்கத்தால் எவ்வித பொருளாதாரப் பயன்களும் ஏற்படப் போவதில்லை.
No comments:
Post a Comment