உங்கள் வருகைக்கு நன்றி!!

Monday, 18 March 2013

தேநீர் .


ஒரு கோப்பை  தேநீர் தயாரிக்க போகிறீர்களா?
 
 அரை கோப்பை  நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு கொதி வந்ததும், அத்துடன் அரை கோப்பை  பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்துங்கள்.
இது சுவையான தேநீர் தயாரிக்கும் முறை.
தேநீரில்  சில வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை  காண் போம்.

மசாலா தேநீர் ஏலக்காய் - 6, கிராம்பு - 6, சோம்பு - 1 தேக்கரண்டி, தனியா - அரை தேக்கரண்டி, ஜாதிக்காய் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, பட்டை போன்றவற்றை பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்ததும், இந்த பொடியையும், தேயிலையுடன் சேர்த்து போட்டு கொதி வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து, வடிகட்டி அருந்தவும். இது, குளிர்காலத்தில் உடம்பிற்கு சூடு கொடுக்கும்; அருமையான தேநீர்.

ரோஸ் தேநீர் : தேநீர் கொதிக்கும் போது, புத்தம் புதிய ரோஜா இதழ்களை போட்டு தேநீர் தயாரிக்கலாம். ரோஜாப்பூ இதழ்களை காயவைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ தேநீர் குழந்தைகள், சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். இந்த டீயை தயாரிக்கும் போது, தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தவும்.
இஞ்சி தேநீர் : அஜீரணம், வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி தே நீர் . இஞ்சியை தோலை நீக்கி, நன்கு இடித்து, டீ கொதிக்கும் போது போட்டால், இஞ்சி டீ ரெடி!

ஏலக்காய்தேநீர் :ஏலக்காயை தோலுடன் பொடி செய்து, தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். பலகாரங்கள் செய்ய, ஏலப்பொடி செய்யும் போது, ஏலக்காய் தோலை எறியாமல், சேகரித்து வைத்து உபயோகிக்கலாம்.

எலுமிச்சை தேநீர் : நீரை கொதிக்க விட்டு, தேயிலையை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி வடிகட்டவும். ஆறியதும், அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து, சில ஐஸ்கட்டிகளைப் போட்டு, பால் இல்லாமல் குடிக்கவும்.
பு தினா தேநீர் : சில புதினா இலைகள், துளசி இலைகளோடு, சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு, 5 மிளகையும் பொடி செய்து போட்டு, நீரை கொதிக்க விடவும். பின், தேயிலை, சர்க்கரை, பால் கலந்து, வடிகட்டி அருந்தவும். இது, ஜலதோஷம், இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.
இது போல் செம்பருத்தி பூ  போன்ற உடல் நலம் தரும் மூலிகைகளை இணைத்து பல வகைகளில் நீங்கள் தேநீர் தயாரித்து பருகலாம்.ஆனால் குடிக்கும் தைரியம் அல்லது திறமை உங்களுக்கு வேண்டும்.ஆனால் அவை உடலுக்கு நன்மைதான் தரும்.
இப்போது கிரீன் டீ என்று பல கடைகளில் கிடைக்கிறது.அதை வாங்கி பருகலாம்.அது பல வகைகளில் உடலுக்கு நன்மை தரும் சக்தியுள்ளது.ஆனால் அதில் இப்போது போலிகள் வழக்கம் போல் வர ஆரம்பித்துள்ளது.அதை கவனித்து வாங்குங்கள்.

No comments:

Post a Comment