உங்கள் வருகைக்கு நன்றி!!

Monday, 18 March 2013

ஆண்ட்ராய்ட்-விண்டோஸ் வளர்ச்சி


ஸ்மார்ட் போன்களில், அதிக எண்ணிக்கை யில் பயன்படுத்தப்படும் இயக்க முறையாக ஆண்ட்ராய்ட்  வேகமாக பரவி வருகிறது . இதனால் விண்டோஸ் வளர்ச்சி  சரிந்து வருகிறது.
 ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டினைக் கணக்கிட்ட போது இது தெரியவந்துள்ளது. ஸ்மார்ட் போன்களில் 53.4% போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.
 இதனை அடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின், ஐ.ஓ.எஸ். சிஸ்டம், 36.3% கொண்டுள்ளது.
பிளாக் பெரி மூன்றாவது இடத்தையும், 
விண்டோஸ் போன் நான்காவது இடத்தையும் கொண்டுள்ளன. 
 விண்டோஸ், முன்பு இருந்த பங்கில், 0.7 % குறைந்து, 2.9 % மட்டுமே கொண்டுள்ளது.

விண்டோஸ் போன் 8, சர்பேஸ் சாதனங்கள் என மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்த போது, விண்டோஸ் போன் சிஸ்டம், ஸ்மார்ட் போன்களில் அதிக அளவில் இடம் பிடிக்கும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பிற்கு உரம் சேர்க்கும் வகையில் நோக்கியாவின் லூமியா வரிசை போன்கள் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் வெளிவந்தன. ஆனால் அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 
இந்தநிலைக்குக் காரணம் கூகுள்.மற்றும் ஆண்ட் ராய்ட்  தான்.
விண்டோஸ் போன் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், அப்ளிகே
ஷன்களைத் தயாரித்து வழங்கப் போவதில்லை என்று அறிவித்து, விண்டோஸ் போன் 8 பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை எனவும் அறிவித்தது.
இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் போன் 8 சிஸ்டம், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங் களைக் காட்டிலும் திறன் கொண்டது என பரவலாக கைப்பேசி உபயோகிப்பாளர்களிடம் கொண்டு  செ ல்லவில்லை.
அதுவே விண்டோஸ் பின்தங்கி விட முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆண்ட்ராய்ட் போன் சிஸ்டத்திற்கான போட்டியில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்.6 ஆகியவையே தற்பொது முன்னணியில் அதிகமானோர் பயன்படுத்தும் முறைகளாக இரூக்கிறது.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
QR Code

தற்போதைய  தொழில்நுட்ப உலகிலும் ,வியாபார உலகிலும்  Bar Code - இற்கு அடுத்தபடியாக  QR Code - உபயோகம்  அதிகரித்து வருகின்றது.
அ தற்கு காரணம் Bar Code - ஐ  காட்டிலும் QR Code - ஐ கணினி , கைப்பேசிகள் போன்றவைகளில் பயன்படுத்தக்கூடியவாறு உள்ளது.பயன்படுத்த எளிதாகவும் -பாதுகாப்பாகவும் உள்ளது.
இந்த  QR Code - ஐ நாமே  தயாரித்துக்கொள்வதற்கு QR Label Creator எனும் மென்பொருள் பல  இனையத்தள ங்களில்  உள்ளன.
இம்மென்பொருளின் உதவியுடன் எழுத்துக்கள், இணைய முகவரிகள் ஏனைய தரவுகளை உள்ளடக்கியதாக QR Code - இனை உருவாக்கிக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment